காஷ்மீரில் நிலம் வாங்கி வீடு கட்டுவேன் - கோவா மந்திரி சொல்கிறார்

காஷ்மீரில் நிலம் வாங்கி வீடு கட்டுவேன் என கோவா மந்திரி கூறியுள்ளார்.
காஷ்மீரில் நிலம் வாங்கி வீடு கட்டுவேன் - கோவா மந்திரி சொல்கிறார்
Published on

பனாஜி,

காஷ்மீர் மாநிலத்துக்கு 370 சட்டப்பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் அங்கு சொத்துகளை வாங்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டதன் மூலம், தற்போது பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அங்கு சொத்துகளை வாங்க முடியும்.

இந்த சூழலில் கோவா மாநிலத்தின் துறைமுகங்கள் துறை மந்திரி மைக்கேல் லோபோ தான் காஷ்மீரில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி குடியேறப்போவதாக தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் குறித்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவுக்கு மத்திய அரசை வாழ்த்தி கோவா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, மைக்கேல் லோபோ இதனை கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில், நான் காஷ்மீரில் நிலம் வாங்க திட்டமிட்டுள்ளேன். அங்கே ஒரு வீடு கட்ட விரும்புகிறேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதும் அந்த வீட்டில் தங்கியிருக்கப்போகிறேன். அங்குள்ள எனது சட்டமன்ற நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறேன் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com