

புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்று நேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதை யொட்டி, அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு வீடியோவுடன் பதிவு வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் 2 ஆண்டு களில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு இந்தியனின் குரலையும் அதிகார வர்க்கத்தின் காதுகளுக்கு எடுத்துச் செல்லும் ஒரே பணிக்கே அர்ப்பணித்துள்ளேன். நீட் தேர்வர்களுக்காக போராடுதல், தேர்தல் மோசடியை அம்பலப்படுத்துதல், அரசியலமைப்பை பாதுகாத்தல் என ஒவ்வொரு முனையிலும் உங்களுடன் நின்றிருக்கிறேன். இன்றும் நிற்கிறேன்.
எப்போதும் நிற்பேன். தெருக்களில் இருந்து நாடாளுமன்றம் வரை மக்களின் நம்பிக்கைதான் எனது மாபெரும் பலம். இந்த பயணம் நீளமானது. ஆனால், எனது உறுதிப்பாடு அதேதான். உங்களுக்காக போராடிக்கொண்டே இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.