ஓட்டையும், நாட்டையும் விற்கவே மாட்டேன்: மாநிலங்களவையில் கமல்ஹாசன் எம்.பி. பேச்சு

தமிழன் பிச்சை எடுக்க மாட்டான். அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான் என்று மாநிலங்களவையில் இன்று முதல் முறையாக பேசிய கமல்ஹாசன் எம்.பி. தெரிவித்தார்.
ஓட்டையும், நாட்டையும் விற்கவே மாட்டேன்: மாநிலங்களவையில் கமல்ஹாசன் எம்.பி. பேச்சு
Published on

டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன் எம்.பி. இன்று முதல் முறையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மாநிலங்களவையில் பேசுவதை நான் கௌரவமாக கருதுகிறேன். என் சகோதரர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. மக்களுக்காக பேசுவதற்கு பலர் மன்றத்துக்கு பல வழிகள் திறந்துள்ளது. எனக்கான வழி திரையுலகம் மூலம் திறந்துள்ளது. பரமக்குடியில் பிறந்த குழந்தை திரையுலகம் மூலமாக தமிழ் மக்களுக்கு அறிமுகமானது.

நான் எனது மொழியை ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக்கொண்டேன். அந்த ஆசிரியர்களில் ஒருவர் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரை. எங்கள் மொழிக்கு எதிரான எந்த விதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

1967-ல் எனது கருத்து உருவாக்கத்தில் வழிகாட்டியாக அவர் அமைந்தார். அவர் வழிகாட்டிய மையம் என்ற கொள்கையை தான் நான் கையில் வைத்திருக்கிறேன். அவர் உரையாற்றிய இதே அவையில் இருந்து நானும் பேசுகிறேன். நான் எனது மனதில் மையம் கொண்ட புயலில் இருந்து வரும் வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறேன். இந்த வார்த்தைகள் உங்களில் சிலருக்கு காயத்தை கொடுக்கலாம். நான் கடவுளை நோக்கி கை கூப்ப போவதில்லை. எனது பகுத்தறிவு மூளை, கடவுள் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அப்புறப்படுத்திவிட்டது.

பிரியசகோதரி பவதிபிச்சாந்தேகி என்று தெலுங்கில் இசைபாடி வந்த அந்த மாமனிதர், இசைமேதை தியாகராஜன். அவர் பிக்சாபாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள். நீங்கள் வெள்ளைக்காரக் கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகளாய் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சைப்பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக்குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்கிறீர்கள். தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா. ஓரளவு உண்மைதான். ஒரு தெற்கத்தி அறிவுரை தந்தாய். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே. தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்.

தங்கச்சி ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டேன். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன். கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள்.

பகுந்தறிந்த தமிழ்ச்சித்தன் கூற்று இது. உம் வினை உம்மைச் சுடுக. என்றும் எங்கள் நாடு நீடூடி வாழும். வந்தீர், வென்றீர், செல்வீர். இது உலக நியதி, அரசியல் நியதியும் கூட. வீழ்க வளமுடன், தமிழ் என்றும் வாழும் நலமுடன். அவை கண்டடைந்த தலைவர் கூட்டத்திற்கு வணக்கம். சென்றும் வருவேன், நாளை எமதே, உங்கள் கமல்ஹாசன். ஜெய்ஹிந்த்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com