கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் - ராகுல் காந்தி

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்த கேப்டன் வருண் சிங்குக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் - ராகுல் காந்தி
Published on

பெங்களூரு,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வருண்சிங் படுகாயம் அடைந்தார்.

அவருக்கு பெங்களூரு கமாண்டோ ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும், சீராக உள்ளது என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை காப்பாற்றும் நோக்கிலே டாக்டர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குரூப் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குணமடைந்து வருவதற்கான இந்தப் பாதையில் இந்தியா உங்களுடன் துணை நிற்கிறது. என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com