

புதுடெல்லி,
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்திய விமானப்படையில் பயணியாற்றிய உயர் பதவியில் பணியாற்றியவர் பேசுகையில், 2008 மும்பை தாக்குதலை அடுத்து பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தும் திட்டம் முந்தைய பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருந்தார். இதில் வருத்தத்திற்குரிய வகையில், அப்போதைய அரசு அதனை மேற்கொள்ளும் தைரியத்தை கொண்டிருக்கவில்லை. எப்போது உரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்களோ, அப்போது பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடியை கொடுத்தோம், என்றார்.
பிரதமர் மோடி மேலும் பேசுகையில் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக நாங்கள் வலுவான போரை முன்னெடுத்து உள்ளோம் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.