கொரோனா தொற்று பரவல் காரணமாக சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு - இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு தகவல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு முக்கியமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

வரும் மே மாதம் 21ம் தேதி நடைபெற இருந்த இறுதித்தேர்வு மற்றும் மே 22ஆம் தேதி நடைபெற இருந்த இடைநிலைத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்வுகள் நடைபெறும் 25 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று ஐசிஏஐ தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com