உத்தர பிரதேசத்தில் பனி மூட்டம்: அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் - 4 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் பனி மூட்டத்தின் காரணமாக அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலியாயினர்.
உத்தர பிரதேசத்தில் பனி மூட்டம்: அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் - 4 பேர் பலி
Published on

ராம்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜத்நகர் என்ற இடத்தில் நேற்று அதிகாலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் வருவதே தெரியாத வகையில் பனி படர்ந்து இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மினிவேன், டிராக்டருடன் மோதியது. அதே சமயம் கார் ஒன்றும் விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.

அடுத்தடுத்து 3 வாகனங்களும் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அந்த சாலையில் சில மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com