

சென்னை,
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்டது. இன்றுடன் பொன். மாணிக்கவேல் ஓய்வு பெறும் நிலையில் மேலும் ஒரு ஆண்டு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தும் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு திறன்பட செயல்பட முடியுமோ அவ்வளவு துரிதமாக செயல்படுவோம். எங்களுடைய விசாரணைக் குழு அப்படியே இருக்கும். அதில் எந்தஒரு மாற்றமும் நிகழாது. அரசுக்காகத்தான் பணியாற்றுகிறோம். எங்களால் யாருக்கும் சிரமம் ஏற்படாது. ஒருவருடத்தில் எனக்கான பொறுப்பை முடிப்பேன். ஒருவருடத்திற்குள் விசாரணையை முடிப்பேன். உறுதியாக சிலைகளை கொண்டுவருவேன் என்று கூறியுள்ளார்.
ஊதியமே வழங்கவில்லை என்றாலும் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் எனவும் பொன் மாணிக்கவேல் பேசியுள்ளார்.