பாட்னா துர்கா பூஜையில் மருத்துவர்கள், காவலர்களை பாராட்டும் வகையில் சிலை

பாட்னாவில் நடைபெற்ற துர்கா பூஜையில் மருத்துவர்கள், காவலர்கள் ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
பாட்னா துர்கா பூஜையில் மருத்துவர்கள், காவலர்களை பாராட்டும் வகையில் சிலை
Published on

பாட்னா,

நவராத்திரி பூஜையையொட்டி பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற துர்கா பூஜையில் மருத்துவர், காவலர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் சேவைகளை பாராட்டும் விதமாக அவர்களின் தலையில் அம்மன் கிரீடம் வைப்பது போன்று சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், தீயவைகளை வதம் செய்து மக்களை கடவுள் காப்பது போல, கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆகியவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்று தெரிவித்தனர். இந்த சிலைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com