இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு - நீல எச்சரிக்கை விடுப்பு

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு - நீல எச்சரிக்கை விடுப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

இடுக்கி அணையின் முழு கொள்ளளவு 2 ஆயிரத்து 403 அடியாகும். இந்த நிலையில் தற்போதைய நீர்மட்டம் 2 ஆயிரத்து 390 புள்ளி 86 அடியாக உயரந்துள்ளது.

இதன் காரணமாக அங்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதி மக்கள் விழிப்புடன் இருக்கவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com