எந்தவொரு வல்லரசும் நம் சுயமரியாதையை தீண்டினால்...தக்க பதிலடி, சீனாவுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக எச்சரிக்கை

எந்தவொரு வல்லரசு நாடும் நம் சுயமரியாதையை தீண்டினால் ... தக்க பதிலடி கிடைக்கும் என சீனாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தின் வலுவான செய்தியை கூறி உள்ளார்.
எந்தவொரு வல்லரசும் நம் சுயமரியாதையை தீண்டினால்...தக்க பதிலடி, சீனாவுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக எச்சரிக்கை
Published on

புதுடெல்லி

பெங்களூரில் நடைபெற்ற ஆயுதப்படை படைவீரர் தினத்தில் கலந்து கொண்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும் போது கூறியதாவது:-

நாங்கள் போரை விரும்பவில்லை, அனைவரின் பாதுகாப்பையும் பாதுகாக்க நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். ஆனால் எந்தவொரு வல்லரசும் எங்களது சுயமரியாதையை புண்படுத்த விரும்பினால், எங்கள் வீரர்கள் ஒரு பொருத்தமான பதிலடி கொடுக்க வல்லவர்கள்.

இது நமது இரத்தத்திலும் கலாச்சாரத்திலும் இருப்பதால் மற்ற நாடுகளுடன் அமைதியான மற்றும் நட்பான உறவை இந்தியா விரும்புகிறது.

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்கள் துணிச்சலையும் பொறுமையையும் வெளிப்படுத்தினர்.அதை எடுத்து கூறினால் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள்.

எச்.ஏ.எல் நிறுவனத்திடமிருந்து 83 உள்நாட்டு எல்.சி.ஏ தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளோம். இந்த முடிவு நாட்டில் 50,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்.

முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் (இசி எச் எஸ்) தனியார் மருத்துவமனைகளை சேர்க்க உள்ளூர் தளபதிகளுக்கு நாங்கள் அங்கீகாரம் அளித்துள்ளோம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com