காங்கிரஸ், சமாஜ்வாடி வெற்றி பெற்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் - பிரதமர் மோடி பேச்சு

புல்டோசரை எங்கு பயன்படுத்தலாம், எங்கு பயன்படுத்தக் கூடாது என்பதை யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
காங்கிரஸ், சமாஜ்வாடி வெற்றி பெற்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் - பிரதமர் மோடி பேச்சு
Published on

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

"காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள். குழந்தை ராமர், கோயிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார்.

புல்டோசர்களை எங்கு பயன்படுத்துவது, எங்கு பயன்படுத்தக் கூடாது என்பதை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் இருந்து அவர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது. மறுபுறம், இந்தியா கூட்டணி குழப்பங்களை உருவாக்கி வருகிறது.

தேர்தலில் வெற்றி பெற்று மோடி அரசு ஹாட்ரிக் சாதனை படைக்கும். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கி உள்ளன."

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com