

புதுடெல்லி,
ஜனாதிபதி இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். இதற்கு இந்தி நடிகைகள் வரவேற்பு தெரிவித்தனர்.
பழம்பெரும் நடிகை சிமி காரேவால் கூறுகையில், காஷ்மீரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட செய்தியை அறிந்து அன்று இரவு முழுவதும் தூங்காமல் தவித்தேன். இது நம் நாடு தானா? என்றே சந்தேகம் எழுந்தது. தற்போது அரசு எடுத்துள்ளது சரியான நடவடிக்கை என்றார்.
நடிகை ஷில்பா ஷெட்டி கூறும்போது, சிறுமிகளிடம் வக்கிரமாக நடந்து கொள்ளும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
இதேபோல் நடிகைகள் கிரிதி சனோன், அதிதி ராவ், ஹிமா குரோஷி, சோனம் கபூர் உள்ளிட்ட பலரும் மத்திய அரசின் அவசர சட்டத்தை வரவேற்று பாராட்டு தெரிவித்து உள்ளனர்.