பீகார் தேர்தல் பா.ஜனதா அதிக இடங்களில் முன்னிலை; நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவாரா பா.ஜனதா என்ன சொல்கிறது

பீகார் தேர்தலில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் 42 இடங்களில் 500 வாக்குகளும், 74 இடங்களில் 1000 வாக்குகளும் வித்தியாசத்தில் முன்னிலையில் தான் உள்ளன.
பீகார் தேர்தல் பா.ஜனதா அதிக இடங்களில் முன்னிலை; நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவாரா பா.ஜனதா என்ன சொல்கிறது
Published on

பாட்னா

பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டன.

இன்று நடக்கும் வாக்கு என்ணிக்கையில் முதலில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் மெகா கூட்டணி பின்தங்கி தற்போது பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

பீகார் தேர்தலில் எந்தக் கட்சி பெரும்பான்மை கிடைக்கும் என என்பதில் இன்னும் சரியான நிலவரம் தெரியவில்லை. பெரும்பான்மை விவகாரத்தில் முன்னும் பின்னுமாக தோன்றினாலும், பீகார் தேர்தலின் இறுதி முடிவுகளுக்காக மாலை வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை. ஏனென்றால், தற்போது 42 இடங்களில் 500 வாக்குகளும், 74 இடங்களில் 1000 வாக்குகளும் வித்தியாசம் தான் உள்ளது.

இருந்தாலும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தெளிவான பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என கூறப்படுகிறது. ஆனால் அதில் ஒரு ஆச்சரியமும் இருக்கிறது. இந்தத் தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து வருகிறது. இதுவரை வெளியான எண்ணிக்கையின்படி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 130 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதில், மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், பீகாரில் பாஜக இதுவரை அதிக இடங்களில் வெற்றி பெற்றது இல்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 53 இடங்களை வென்றது. இந்த முறை 74 இடங்களில் பா.ஜனதா தனிக்கட்சியாக முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் 48 இடங்களிலும், விஷ்வ இந்து பரிஷத் 8 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. மறுபுறம், எதிர்க்கட்சியின் மெகா கூட்டணியில் ராஷ்டீரிய ஜனதா தளம் 60 மற்றும் காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதாவது, இந்த முறை தேர்தல் போட்டியில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவாகி வருகிறது என்பதை இது காட்டுகிறது.

பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா கூறும் போது மோடியாலேயே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்து உள்ளது. மாலைக்குள், அரசாங்க உருவாக்கம் மற்றும் யார் முதல்வர் என்ற பிரச்சினைகள் குறித்து நாங்கள் முடிவு செய்வோம்

இந்த அறிக்கை பீகாரில் தலைமை தாங்க ஒரு புதிய வேட்பாளரைப் பற்றி பா.ஜனதா சிந்திக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. இதைத்தான் அவர் குறிப்பிடுகிறாரா என்று கேட்டபோது, போக்குகள் முடிவுகளாக மாறினால் நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராவார் என்ற பாஜக தனது வாக்குறுதியை உறுதிப்படுத்தும் விஜயவர்கியா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com