ஆட்சிக்கு வந்தால் ஒவைசியை நாடு கடத்துவோம்: ஐதராபாத் பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு


ஆட்சிக்கு வந்தால் ஒவைசியை நாடு கடத்துவோம்:    ஐதராபாத் பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 16 March 2025 1:22 PM IST (Updated: 16 March 2025 1:39 PM IST)
t-max-icont-min-icon

தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்ததும் அசாதுதின் ஓவைசியை நாடு கடத்துவோம் என பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங்கின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத் கோஷாமஹால் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் ராஜாசிங். பாஜகவை சேர்ந்த இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சியாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சர்ச்சை பேச்சு காரணமாக கட்சியில் இருந்தும் சில நாட்கள் நீட்கப்பட்டு இருந்தார். பின்னர் மன்னிப்பு கோரியதால், மீண்டும் கடந்த தேர்தலில் சீட் கொடுத்தது. கோஷாமஹால் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்றார். இந்த நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

ரம்ஜான் நோன்பு வேளையில் ஐதராபாத் எம்.பியான அசாதுதீன் ஓவைசி மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். சமீபத்தில் கூட இவர், ஹோலி பண்டிகையில் பிரச்சனையை உண்டாக்கும்படி பேசினார். இது மிகவும் கண்டிக்க தக்கது.தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைத்ததும், அசாதுதீன் ஓவைஸி நாடு கடத்தப்படுவார். இல்லையெனில், அவர் பாஜகவில் இணைவதாக கட்சி தலைவர்களின் காலில் விழுந்து கெஞ்சினால் மட்டுமே இவர் இந்தியாவில் வசிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்" என்றார்.

1 More update

Next Story