"இறைச்சி சாப்பிட்டால் இயற்கை பேரிடர்கள் நிகழும்.!" - ஐஐடி மண்டி இயக்குனர் பேச்சால் சர்ச்சை

இறைச்சி சாப்பிட்டால் இயற்கை பேரிடர்கள் நிகழும் என ஐ.ஐ.டி. மண்டி இயக்குனர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"இறைச்சி சாப்பிட்டால் இயற்கை பேரிடர்கள் நிகழும்.!" - ஐஐடி மண்டி இயக்குனர் பேச்சால் சர்ச்சை
Published on

சிம்லா,

இறைச்சிக்காக உயிரினங்களை கொலை செய்வதால் தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர் சம்பவங்கள் ஏற்படுகின்றன என்று ஐ.ஐ.டி. மண்டி இயக்குனர் லக்ஷமிதார் பெஹெரா பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

உணவுக்காக விலங்குகளை கொல்லும் போது, சுற்றுச்சூழலில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார். யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டதும் வைரல் ஆக துவங்கி விட்டது.

"அப்பாவி விலங்குகளை கொன்று இரையாக்குவது சுற்றுச்சூழலை பாதிப்பதில் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இது ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்களை நாம் மீண்டும், மீண்டும் எதிர்கொண்டு வருகிறோம். இவை அனைத்திற்கும் காரணம் விலங்குகளை கொடுமைப்படுத்துவது தான்." "நல்ல மனிதர்களாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இறைச்சி போன்ற உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். ஆமாவா, இல்லையா?" என்று அவர் மாணவர்களிடையே பேசும் போது கேள்வியாக எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com