'தேர்தலில் தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வதா?' - மத்திய மந்திரி கண்டனம்

தேர்தலில் தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வது சரியல்ல என்று மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
'தேர்தலில் தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வதா?' - மத்திய மந்திரி கண்டனம்
Published on

போபால்,

மராட்டிய மாநில தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னர் வெளியான தகவல்களின்படி, வாக்குப்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 7.83 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடிதம் எழுதினார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பாய் ஜக்தாப் உள்ளிட்ட பல்வேறு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வது சரியல்ல என்று மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தலில் தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வதா? இது இன்னும் எத்தனை காலத்திற்கு நீடிக்கும்? தங்களிடம் இருக்கும் குறைகளை கண்டறிய முடியாதவர்களுக்கு யாராலும் உதவி செய்ய முடியாது" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com