ஐஐடி கவுகாத்தியில் படிக்கும் மாணவர் விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு

ஐஐடி கவுகாத்தியில் படிக்கும் மாணவர் ஒருவர், அவரது விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
ஐஐடி கவுகாத்தியில் படிக்கும் மாணவர் விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு
Published on

கவுகாத்தி,

கவுகாத்தியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) பி.டிஇஎஸ் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், அவரது விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த மாணவர் கேரளாவைச் சேர்ந்த சூர்ய நாராயண் பிரேம்கிஷோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று காலை விடுதி அறையில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றும் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஐடி கவுகாத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 செப்டம்பர் 16 ஆம் தேதி, ஐஐடி கவுகாத்தி வளாகத்தில் வடிவமைப்புத் துறையின் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது.

மாணவரின் பெற்றோருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கவுகாத்திக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த துயரமான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். மாணவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நிறுவனம் தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறது என்று கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com