‘காங்கிரஸ் ஆட்சியில் சட்டவிரோத ஊடுருவல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது’ - கிரண் ரிஜிஜு


‘காங்கிரஸ் ஆட்சியில் சட்டவிரோத ஊடுருவல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது’ - கிரண் ரிஜிஜு
x

இந்தியர் அல்லாதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கக்கூடாது என கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் ஆட்சியில் சட்டவிரோத ஊடுருவல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

“பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோத ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்டவிரோதமாக ஊடுருவி இந்தியாவில் வசித்து வருபவர்களை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை, வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோத ஊடுருவல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

இந்த சட்டவிரோத ஊடுருவல்காரர்களை இங்கு குடியேற்றியது காங்கிரஸ் கட்சிகள்தான். சட்டவிரோத ஊடுருவல்காரர்களை ஒருவரொருவராக அடையாளம் கண்டு வெளியேற்றுவது எங்கள் கடமை. இந்தியர் அல்லாதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கக்கூடாது.

தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். (SIR) நடைமுறை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எங்கள் பொறுப்பு. அதேபோல் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை வெளியேற்றுவதும் எங்கள் பொறுப்பாகும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story