

துபாய்,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான மன்சூர் கான் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிவாஜி நகரில், நகைகடை நடத்தி வந்தவர் முகமது மன்சூர் கான். இவர் பண முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக அறிவித்தார். இதை நம்பி பலரும் முதலீடு செய்தனர். ஆனால், முதலீடு செய்தவர்கள் ஏமாற்றப்பட்டனர். இதனையடுத்து, மன்சூர் கான் மீது 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். விசாரணையில் சுமார், 1,230 கோடி ரூபாய் அளவு மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.
இதற்கிடையில் மன்சூர் கான் ஜூன் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறினார். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை துபாயில் இருந்து டெல்லி வந்த மன்சூர் கானை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.