சண்டிகரை இணைப்பதற்கான தீர்மானம் பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

பஞ்சாப் மாநிலத்துடன் சண்டிகரை இணைப்பதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
சண்டிகரை இணைப்பதற்கான தீர்மானம் பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
Published on

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அரியானா தனியாக பிரிக்கப்பட்ட போது, இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக சண்டிகர் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து யூனியன் பிரதேசமான சண்டிகரை பஞ்சாப் 60 சதவீதமும் ஹரியானா 40 சதவீதமும் நிர்வகித்து வந்தன.

இந்த நிலையில், சண்டிகரில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரையும், மத்திய சேவை விதிகளின் கீழ் கொண்டுவரும் அறிவிப்பை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், 'மத்திய சேவை விதிகளால், சண்டிகர் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் ஆபத்து உள்ளது' என குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், சண்டிகரை முழுமையாக பஞ்சாபிற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை பஞ்சாப் சட்டப்பேரவையில் ர் பகவத்மான் முன்மொழிந்தார். சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பகவந்த் மான் முன்மொழிந்த தீர்மானம் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com