

புதுடெல்லி
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக, பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது .
தீபக் மிஸ்ரா, நீதித்துறை நிர்வாகத்தை தவறாக பயன்படுத்துகிறார், சக நீதிபதிகளின் அதிருப்திக்கு ஆளானவர் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளை ஆதாரமாக வைத்து, காங்கிரஸ் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி உள்ளது.
இதில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். காங்கிரஸின் இம்முயற்சிக்கு கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் சில எதிர்க்கட்சிகளும் ஆதரவு தராது என்றும் கூறப்படுகிறது.