7 விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற நடைமுறை அமல்


7 விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற நடைமுறை அமல்
x

7 விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதுடெல்லி,

வெளிநாட்டு பயணம் செய்யும் பயணிகள் விமான நிலையங்களில் குடியேற்ற நடைமுறையை முடிப்பதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. இதை தவிர்க்க மத்திய அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. அதாவது இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு இந்தியர் அட்டை வைத்திருப்போருக்காக 'விரைவான குடியேற்றம் - நம்பகமான பயணி திட்டத்தை' அமல்படுத்தி உள்ளது.

முதல் முறையாக டெல்லி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் 22-ந் தேதி இந்த திட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மேலும் 7 விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

அதன்படி, விரைவான குடியேற்ற நடைமுறை சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, ஆமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் இன்று முதல் இது அமலுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த திட்டம் https://ftittp.mha.gov.in என்ற இணையதளம் மூலம் செயல்படுத்தப்படும். இதை பயன்படுத்த விரும்பும் பயணிகள் தங்கள் பயோமெட்ரிக் விவரங்கள் உள்பட அனைத்து தரவுகளையும் மேற்கொண்ட இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

1 More update

Next Story