காஷ்மீரில் ஜிஎஸ்டி நிறைவேற்றம் சட்டப்பிரிவு 370 இன் நீக்கத்திற்கு வழிவகுக்கும் - தேசிய மாநாட்டு கட்சி

காஷ்மீர் மாநிலத்தில் ஜிஎஸ்டி வரிச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது அதன் சிறப்பு அரசியல் சட்டப் பிரிவான 370 இன் நீக்கத்திற்கே வழிவகுக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி கூறியுள்ளது.
காஷ்மீரில் ஜிஎஸ்டி நிறைவேற்றம் சட்டப்பிரிவு 370 இன் நீக்கத்திற்கு வழிவகுக்கும் - தேசிய மாநாட்டு கட்சி
Published on

ஸ்ரீநகர்

இந்திய அரசியல் சட்டப்பிரிவான 101 ஐ திருத்தம் செய்து அமல் செய்வதன் மூலம் அரசு தனிச் சிறப்பான 370 சட்டத்தை மெதுவாக நீக்கம் செய்யவே பயன்படும் என்றார் தேசிய மாநாட்டுக்கட்சியின் பேரவை உறுப்பினரான அலி முகம்மது சாகர். இன்று பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது.

சாகர் மேலும் கூறுகையில் நிதியமைச்சர் சாபு பேரவையை ஏற்கும் செய்யும் விதத்தில் செயலாற்றவில்லை என்றார். அவர் சட்டப்பிரிவு 370 நேர்மறையாகவும், ஆக்கத்திற்கு உதவும்படியாகவும் இருக்கச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். இது ஆர் எஸ் எஸ் பாஜகவின் சித்தாந்தம். இதன் அடுத்த இலக்கு சட்டப்பிரிவு 370 ஆகும்.

மற்றொரு தேசிய மாநாட்டுக்கட்சி உறுப்பினரான தேவிந்தர் சிங் ராணா போதுமான பாதுகாக்கும் பிரிவுகள் ஏதுமின்றி சட்டப்பிரிவு 101 நேரடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றார். நிதியமைச்சர் மீண்டும் மீண்டும் பேரவையில் பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றே இப்பிரிவு ஏற்கப்படும் என்றார். ஆனால் இரண்டு நாள் விவாதத்திற்குப் பிறகு இந்திய அரசமைப்புப் பிரிவு 101 அதன் மூல வடிவத்திலேயே அமல் செய்யப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது காஷ்மீர் சட்டப்பேரவை வரலாற்றின் இருண்ட நேரம் என்றார் ராணா. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்கொள்ள திட்டங்கள் வகுக்க கட்சி கூடி பேசும் என்றார் ராணா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com