எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது அவசியம்: பிரதமர் மோடி


எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது அவசியம்: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 22 March 2025 12:37 PM IST (Updated: 22 March 2025 12:39 PM IST)
t-max-icont-min-icon

எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

டெல்லி,

நன்னீரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 22ம் நாள் உலக தண்ணீர் தினம் ஐ.நா. சபையால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, தனது தலைமையிலான அரசு தண்ணீரை பாதுகாப்பது, நிலையான வளர்ச்சியை மேற்கொள்வது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தண்ணீர் நாகரிகங்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. எனவே எதிர்கால சந்ததியினருக்கு அதைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்' என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story