இந்திரா காந்தி செய்தது தவறு: நெருக்கடி நிலை குறித்து மனம் திறந்த சோனியா காந்தி

நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு. இதையேதான் இந்திரா காந்தியும் உணா்ந்திருப்பாா் என நம்புகிறேன் என்று சோனியா கூறினார்.
சோனியா காந்தி
சோனியா காந்தி
Published on: 

சோனியா பேட்டி

காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் நாடாளு மன்றக்குழு தலைவருமான சோனியா காந்தி, தனது வாழ்வின் முக்கிய தருணங்கள் பற்றிய நினைவுக்குறிப்புகளை புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகம் வருகிற 10-ந்தேதி வெளியிடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளிதழ் ஒன்றுக்கு அவர் சிறப்பு பேட்டியளித்தார். அதில் பிரதமர் மோடியின் ஆட் சியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். மேலும் தனது அரசியல் பயணம், இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

சீரமைக்க நீண்ட காலம்

பிரதமர் மோடி ஆட்சியில் மக்கள் அசவுகரியத்தை உணர தொடங்கி விட்டனர். சேதம் ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். சரியான நிர்வாகத்தை அவர் கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் கட்டமைப்பு, நமது ஜனநாய கம், நிறுவனங்களுக்கு மிகப்பெரும் சேதம் விளைந்து இருக்கிறது. இந்த அரசு போன பிறகும் கூட, நமது அமைப்பை சீர்செய்து ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வருவதற்கு அரசியல் கட்சிகளுக்கு நீண்ட காலம் ஆகும்.காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் விவகாரத்தில், நான் அவ்வளவு அவநம் பிக்கை கொண்டவள் அல்ல. இந்த அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

அனைத்து நிறுவனங்கள் மீதும், குறிப்பாக தேர்தல் கமிஷன் மீதும் அவர்கள் கொண்டுள்ள முழுமையான ஆதிக்கத்தையும், பிரதான ஊடகங்கள் மீதான அவர்களின் கட்டுப்பாட்டையும், அவர்களின் பண பலத்தையும், மதத்தை அவர் கள் சுரண்டுவதையும் கணக்கில் கொள்ளுங்கள்.பல தேர்தல்கள் திருடப்பட்டுள்ளன என்பது சமீப மாதங்களில் தெளிவாக நிரூ பிக்கப்பட்டுள்ளன. மக்கள் இப்போது அதைப்பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.இவ்வாறு சோனியா கூறினார்.

அரசியல் பிரவேசம்

தனது அரசியல் பிரவேசம் குறித்து சோனியா கூறுகையில், '1990-களின் இறுதி யில் எனக்கு மிகுந்த சவாலான நாட்களாக இருந்தது. வீட்டில் ஒவ்வொரு முறை யும் கணவர் ராஜீவ் மற்றும் மாமியார் இந்திராவின் புகைப்படத்தை பார்க்கும் போதும் ஒருவித வலியும், குற்றவுணர்வும் என்னை ஆட்கொண்டிருந்தது. அதே நேரம் நானும் அரசியலில் இறங்கக்கூடும் என்று அஞ்சியதாலும், "என்னையும் இழந்துவிடக்கூடாது" என்பதாலும், ராகுலும், பிரியங்காவும் என்னிடம் கடுமை யாக வாக்குவாதம் செய்தனர்' என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தனது மனதில் ஒரு போராட்டமே நடந்ததாக நினைவு கூர்ந்த சோனியா, அதிகாரப் போட்டியுடன் இணைந்திருக்கும் பேராசை, பாசாங் குத்தனம், துரோகம் ஆகியவை நிறைந்த அரசியல் உலகத்தைக் கண்டு தனது மனதின் ஒரு பகுதி பின்வாங்கியதாகவும் கூறினார்.அப்போது பகவத் கீதைதான் தனக்கு உதவியதாகவும், அதில் கிருஷ்ணர் கூறிய, 'கடமையை செய், பலனை எதிர்பாராதே' என்ற வார்த்தைகள்தான் தனக்கு தெளிவை கொடுத்ததாகவும் சோனியா கூறினார்.

நெருக்கடி நிலை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை குறித்து சோனியா கூறும்போது,

நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு. இதையேதான் இந்திரா காந்தியும் உணா்ந்திருப்பாா் என நம்புகிறேன். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட விவகாரத்தில் இந்திரா காந்தி குடும்பத்தினரிடையே பிளவு நிலவியது. ராஜீவ் காந்தியும் நெருக்கடி நிலையை எதிா்த்தாா். அவரின் தாய் இந்திரா காந்தியிடம் அடுத்த தோ்தல் வரை காத்திருக்கும்படி கூறினாா். அதே வேளையில் இளைய மகனான சஞ்சய் காந்தி, நெருக்கடி நிலையை அமல்படுத்தும்படி நெருக்கடி அளித்தாா். எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் இந்திரா காந்தியை வீழ்த்தி விடுவா் என்றும் சஞ்சய் காந்தி எச்சரிக்கை தெரிவித்தாா்.

நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதால், எங்களின் குடும்பத்துக்குள்ளேயே சிறிய பிரச்னை வெடித்தது. ராஜீவ் காந்தி தனது தாயாரிடம் எடுத்துரைக்க நினைத்தாா். ஆனால் அதை கேட்க இந்திரா காந்தி மறுத்து விட்டாா். இதைத்தொடா்ந்து, சஞ்சய் காந்தியால் கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் நெருக்கடி நிலை அரசியலமைப்புக்கு உட்பட்டே செய்யப்பட்டது’ என்றார். இந்த விவகாரத்தில் இந்திரா காந்தி பின்னாளில் பொதுவெளியில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

X