

புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி திடீர் உடல்நல குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர்கங்காராம் ஆஸ்பத்திரியில் கடந்த 24-ந்தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது. இதில் அவர் உடல்நலம் தேறி வருகிறார்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் அஜய் சுவரூப், சோனி யாகாந்தியின் உடல்நிலை குறித்த புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
"சோனியாகாந்தியின் உடல்நிலை மிகவும் தேறியுள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் சவுகரியமாக உணர்கிறார், நடக்கிறார், காலை உணவையும் உட்கொண்டுள்ளார். ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் சீராக உள்ளது. ஓரிரு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து செல்லும் அளவுக்கு உடல் நலம் பெறுவார் என்று நாங்கள் நம்புகிறோம்" என அவர் கூறியுள்ளார்.