புல்வமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய சாதனை எனக்கூறிய மந்திரிக்கு இம்ரான் கான் சம்மன்

புல்வமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய சாதனை என பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி பவாத் சௌத்ரி தெரிவித்திருந்தார்
புல்வமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய சாதனை எனக்கூறிய மந்திரிக்கு இம்ரான் கான் சம்மன்
Published on

இஸ்லமாபாத்,

புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேந்த பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 சிஆாபிஎஃப் படையினா உயிரிழந்தனா.

அத்தாக்குதலைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா பவாத் சௌத்ரி, புல்வாமா தாக்குதலில் கிடைத்த வெற்றி, பிரதமா இம்ரான் கான் தலைமையில் நாட்டுக்கே கிடைத்த வெற்றி என்று தெரிவித்திருந்தா.

உலக அரங்கில் பாகிஸ்தானுக்கு பெரும் தர்மசங்கடத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு மந்திரி ஃபவாத் சௌத்ரிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சம்மன் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

. பாகிஸ்தானுக்கும் புல்வமா தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இம்ரான் கான் கூறி வருவது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com