டெல்லியில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 350 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்

டெல்லியில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 350 கிலோ ஹெராயின் போதைப்பொருள் டெல்லி சிறப்பு போலீஸ் படையால் பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லியில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 350 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்
Published on

புதுடெல்லி

டெல்லி சிறப்பு போலீஸ் படை 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 354 கிலோ ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்து உள்ளனர். இது தொடrபாக இதுவரை அரியானாவைச் சேர்ந்த மூன்று பேரும், டெல்லியைச் சேர்ந்தவரும் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து சிறப்பு போலீஸ் பிரிவு தலைவர் நீரஜ் தாக்கூர் கூறியதாவது :-

இந்த போதை மருந்து கடத்தல் நீண்டகாலமாக நடந்து வருகிறது. இந்த போதை மருந்துகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்துள்ளன. மறைக்கப்பட்ட கொள்கலன்களில் மும்பையிலிருந்து டெல்லிக்கு கடல் வழியாக அவைகள் கொண்டு வரப்பட்டன. மருந்துகள் பஞ்சாபுக்கு வழங்கப்பட இருந்தன.

இந்த போதை மருந்துகள் மத்திய பிரதேசத்தில் உள்ள சிவபுரிக்கு அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் பதப்படுத்தப்பட இருந்தன. அவற்றை மறைக்க பரிதாபாத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது. இதனை இயக்குபவர் ஆப்கானிஸ்தானில் உள்ளார் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com