சிறு குறு தொழில்களுக்கு பிணையின்றி கடனுதவி; நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சிறு குறு தொழில் துறைக்கு பிணையின்றி ரூ.3லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறு குறு தொழில்களுக்கு பிணையின்றி கடனுதவி; நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Published on

புதுடெல்லி,

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

*விரிவான தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிவித்திருக்கிறார்.

* சுய சார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

*இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

*தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

*வளர்ச்சியை ஏற்படுத்தவும் தன்னிறைவு உருவாக்கவும் இந்த சுயசார்பு பாரத திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

*பொருளாதார கட்டமைப்பு, தொழில்நுட்பம் போன்ற 5 தூண்களை உருவாக்குவோம்.

*மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டியிருக்கிறது.

*சிறப்பு திட்டங்கள் மூலம் இந்தியா தன்னிறைவு பெற்று உலகிற்கு உதவும்

*மின் உற்பத்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றிருக்கிறது.

*தன்னிறைவு இந்தியா என்பது உலகத்திடம் இருந்து துண்டித்துக்கொள்வது இல்லை. தன்னம்பிக்கையை அதிகரிப்பதே ஆகும்.

* நேரடி மானிய திட்டம் மக்களுக்கு மிகவும் உதவிகரமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

* அதிக அளவில் உள்ளூர் பொருட்களை உற்பத்தி செய்வதே தன்னிறைவு திட்டத்தின் நோக்கம்.

*உள்ளூர் வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க இத்திட்டம் பயன்படும்.

* மக்கள் சொல்வதை கேட்டு, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும் அரசு

*தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை இந்த காலத்தில் கைகொடுத்துள்ளன

* பிரதான் மந்திரி கிசான் திட்டம், நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது

*ரூ.20 லட்சம் கோடிக்காண திட்டங்களை அடுத்த சில நாட்களில் தொடர்ச்சியாக அறிவிப்போம்.

* இன்று 15 அறிவிப்புகள் வெளியிடப்படும்.

* மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உடனேயே இந்த கொரோனா பேரிடர் வந்திருக்கிறது.

*சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 6 அறிவிப்புகள் இன்று வெளியிடப்படும்.

*சிறு குறு தொழில் துறைக்கு பிணை இல்லாமல் ரூ.3 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.

45 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும்.

*இந்தத் திட்டத்தின் கீழ் அக்டோபர் 31 வரை சிறு குறு நிறுவனங்கள் கடன் பெறலாம்.

*கடன் பெறும் நிறுவனங்கள் முதல் ஒரு ஆண்டுக்கு கடனை திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

* கடன் வசதியை பெற ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com