விபத்தில் சிக்கி ராணுவ வீரர் சாவு

விபத்தில் சிக்கி ராணுவ வீரர் பலியானார்.
விபத்தில் சிக்கி ராணுவ வீரர் சாவு
Published on

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சிக்காம்வி தாலுகா சீலவந்தா சோமாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். ராணுவ வீரரான இவர் பஞ்சாப்பில் உள்ள ராணுவ முகாமில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் முகாமில் இருந்து வெளியே சென்றிருந்த அவர், ஒரு விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அவரது குடும்பத்தினரும், அவருடைய கிராமத்தினரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரது உடலை பஞ்சாப்பில் இருந்து ஹாவேரிக்கு கொண்டு வரும் பணியை அரசு செய்து வருகிறது.

இந்த நிலையில் சிவராஜின் மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'பஞ்சாப்பில் நடந்த விபத்தில் கர்நாடக ராணுவ வீரர் சிவராஜ் வீரமரணம் அடைந்தார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். மேலும் அவரது குடும்பத்தினருக்கு இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை கடவுள் கொடுக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com