ஆந்திராவில் மேலும் 10,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 10,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மேலும் 10,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் இன்று 10,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,86,461 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 77 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,681 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 1,04,354 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 80,426 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com