

கவுகாத்தி,
அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா கொரோனா சூழ்நிலை பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, அசாமில் முழு அளவில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மாவட்ட நீதிமன்றங்கள், ஓட்டல்கள், சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு நாளை (ஞாயிற்று கிழமை) முதல் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
அசாமில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை என உறுதிபட கூறியதுடன், எனினும், முக கவசம் அணிய வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
அசாமில் கடந்த 8ந்தேதியில் இருந்து இரவு ஊரடங்கு திருத்தி அமைக்கப்பட்டது. இதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை இரவு ஊரடங்கானது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.