அயோத்தி ராம ஜென்மபூமியில் அரவிந்த் கெஜ்ரிவால் வழிபாடு

அரவிந்த் கெஜ்ரிவால், ராமர் பிறந்த இடமான ராம ஜென்மபூமிக்கு சென்றார். அங்கு தற்காலிக கோவிலில் உள்ள ராமர் சிலையை வழிபட்டார்.
அயோத்தி ராம ஜென்மபூமியில் அரவிந்த் கெஜ்ரிவால் வழிபாடு
Published on

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 403 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று அயோத்திக்கு சென்றார். சரயு நதிக்கரையில் ஆரத்தி எடுத்தார்.

2-ம் நாளான அரவிந்த் கெஜ்ரிவால், ராமர் பிறந்த இடமான ராம ஜென்மபூமிக்கு சென்றார். அங்கு தற்காலிக கோவிலில் உள்ள ராமர் சிலையை வழிபட்டார். அயோத்தியில் உள்ள அனுமன் கோவிலுக்கும் சென்றார். பின்னர், அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், ராமர் சிலையை வணங்க கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இது டெல்லி மக்களுக்கும் கிடைப்பதற்காக, ஆன்மிக தலங்களுக்கான டெல்லி அரசின் இலவச ஆன்மிக சுற்றுலா திட்டத்தில் அயோத்தியையும் சேர்ப்போம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com