பீகாரில் வேன் மீது லாரி மோதி 7 பேர் சாவு

பீகாரில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலியாயினர்.
பீகாரில் வேன் மீது லாரி மோதி 7 பேர் சாவு
Published on

பாட்னா,

பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ரகுநாத்பூர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வேனில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

நிஜாம்பூர் என்ற கிராமத்துக்கு அருகே உள்ள சாலையில் வேன் அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த ஒரு லாரி, அந்த வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com