பீகார் மாநிலத்தில் வெயில் தாக்கத்தால் ஒரே நாளில் 30 பேர் பலி

பீகார் மாநிலத்தில் வெயில் தாக்கத்தால் ஒரே நாளில் 30 பேர் பலியாயினர்.
பீகார் மாநிலத்தில் வெயில் தாக்கத்தால் ஒரே நாளில் 30 பேர் பலி
Published on

அவுரங்காபாத்,

வடமாநிலங்களில் கடுமையான வெயில் தாக்கம் உள்ளது. பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 30 பேர் வெயில் தாக்கத்தால் பலியானார்கள்.

சதார் ஆஸ்பத்திரி டாக்டர் சுரேந்திரகுமார் சிங் கூறும்போது, வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 30 பேர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் 10 பேர் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மயக்கமாகவும், சிலர் மனநிலை தடுமாற்றத்துடனும் உள்ளனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com