டெல்லியில், வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்: தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் உறுதி

டெல்லியில், வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
டெல்லியில், வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்: தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் உறுதி
Published on

புதுடெல்லி,

டெல்லி மாநில சட்டசபை தேர்தல் வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

மாநில தலைவர் சுபாஷ்சோப்ரா, மூத்த தலைவர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில், வீடுகளுக்கு தலா 300 யூனிட் இலவச மின்சாரம், வலிமையான லோக்பால் மசோதா, மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் ஆகியவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கம் விரைவில் நிறைவேற்றப்படும், புதிதாக 5 எய்ம்ஸ் மருத்துவமனைகள், மாசு கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு பட்ஜெட்டில் 25 சதவீதம் நிதிஒதுக்கீடு என பல வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com