வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் விளக்கம்

வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்?என்பது குறித்து மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். #Budget2018
வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் விளக்கம்
Published on

புதுடெல்லி

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் அறிவிக்கவில்லை.

ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உடையவர்கள் 5 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் வருமானம் பெறுகிறவர்கள் 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானத்தை கொண்டவர்கள் 30 சதவீதமும் வருமான வரி செலுத்துவது தொடரும்.

அதே நேரத்தில் மாத சம்பளதாரர்களுக்கு தற்போது அனுமதிக்கப்படுகிற போக்குவரத்து அலவன்சு கழிவும், பலவகை மருத்துவ செலவினை நிறுவனத்திடம் திரும்ப பெறுவதில் அளிக்கப்படுகிற கழிவும் ரத்து செய்யப்படுகிறது.

இதற்கு பதிலாக நிரந்தர கழிவாக ரூ.40 ஆயிரம் அனுமதிக்கப்படும். இதன்மூலம் 2.5 கோடி மாத சம்பளதாரர்களும், ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர். ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் உள்ளவர்களுக்கு கூடுதல் மிகை வரியாக 10 சதவீதமும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம உடையவர்களுக்கு 15 சதவீதமும் விதிப்பது தொடரும். என அறிவிக்கபட்டு உள்ளது.

வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன் என அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர்

வரி ஏய்ப்பு செய்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதேவேளை, 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரி தாக்கல்செய்துள்ளனர். இதனால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இந்த கூடுதல் வருவாய் அரசுக்குப் போதுமானதாக இல்லை. கடந்த 3 வருடங்களில், வருமான வரி உச்சவரம்பில் அரசு பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. எனவே, வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் ஏதும் செய்யாமல் பழைய முறையே பின்பற்றப்படும். என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com