அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது- பிரதமர் மோடி விளக்கம்

அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது என சோலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது- பிரதமர் மோடி விளக்கம்
Published on

சோலாப்பூர்

மக்களவையில் மசோதா நிறைவேறியது குறித்து மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது கூறியதாவது:-

வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.

எதிர்க்கட்சிகள் எஸ்.சி. / எஸ்.டி.யிலிருந்து சில பகுதிகள் விலக்கப்பட வேண்டும் என்றும் உயர் சாதிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் விரும்புகின்றன. ஆனால் அவற்றிலிருந்து எதுவும் எடுக்கப்படாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்."ஒதுக்கீடு பில் பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன. நேற்று போல, நாங்கள் ராஜ்யசபாவில் மசோதாவை நிறைவேற்றுவோம் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.

மேலும் குடியுரிமை திருத்தம் மசோதா குறித்து பேசும் போது இங்கே தங்க விரும்பும் மற்ற நாடுகளிலிருந்தும் குடியேறியவர்கள் இப்பொழுது இந்திய குடியுரிமை வழங்கப்படுவது போல், முக்கியமானது. இந்த குடியேறியவர்களுக்கு இந்தியா தங்குமிடம் தருகிறது. இந்தியாவுக்கு வந்துள்ள இந்த மக்களை கவனித்துக்கொள்வதற்கான பொறுப்பு நமக்கு உள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com