தெரு நாய்களின் சொர்க்கம்; கோவா நாய் கோவில்..!

நாய் கோவில் அனைத்து கைவிடப்பட்ட தெரு நாய்களுக்கும் தங்கும் சொர்க்கமாக செயல்பட்டு வருகிறது.
தெரு நாய்களின் சொர்க்கம்; கோவா நாய் கோவில்..!
Published on

பனாஜி,

மாண்ட்ரெம் கடற்கரையிலிருந்து சிறிது தூரத்தில் கிர்கர்வாடோவில் 'நாய் கோவில்' அமைந்துள்ளது. இது உண்மையில் நாய்களுக்கு பிரார்த்தனை செய்ய மக்கள் செல்லும் கோயில் அல்ல, இந்த நாய் கோவில் அனைத்து கைவிடப்பட்ட தெரு நாய்களுக்கும் தங்கும் செர்க்கமாக செயல்பட்டு வருகிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த இங்கோ, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாய் கோயிலைத் தொடங்கினார், அதன் பிறகு அவரது வீடு சுமார் 70 நாய்களின் நிரந்தர இல்லமாக மாறியுள்ளது. அவர் அவைகளுக்கு உணவளித்து, கடற்கரைக்கு அழைத்துச் சென்று விளையாடு மகிழ்கிறார்.

இங்குள்ள நாய்களில் சில பார்வையற்றவை, சில உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டவை, மேலும் சிலவற்றை அவற்றின் உரிமையாளர்கள் துரத்திவிட்டனர். இங்கு நாய்கள் சங்கிலியால் கட்டிவைக்கபடவில்லை. அவைகளுக்கு உணவளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு, அன்புடன் பார்த்துக் கொள்ளப்படுகின்றன. அவைகள் கடற்கரைப் பகுதிகளுக்கு விளையாட செல்லும் மற்றும் கோயிலின் நிழலில் ஓய்வெடுக்கும்.

இங்கோ கூறுகையில் உள்ளூர் மீனவர்கள் இந்த நாய்களை வெறுக்கிறார்கள், நான் அவைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால் அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். அவைகளை அடித்து, கொல்லவும் முயற்சிகின்றனர். அதனால் நான்அவைகளை அருகிலேயே வைத்திருக்க முயற்சிக்கிறேன். என்றார்.

கொரோனா தொற்று தொடங்குவதற்கு முன்பு தினசரி பலர் இங்கு வந்து நாய்களுக்கு உணவு சமைத்து அவைகள் குளிப்பதற்கு உதவி செய்தனர். சிலர் எப்போதும் உதவ தயாராக இருக்கிறார்கள். நாய்கள் தூங்கும் மற்றும் ஓய்வெடுக்கும் படுக்கைகள் முதல் நாய்களுக்கு பிடித்த ஐஸ்கிரீம்கள், புதிய காலர்கள் மற்றும் வண்ணமயமான பொம்மைகள் வரை பரிசுகளை வழங்குகின்றனர் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com