

பான்ஜிம்,
பொது இடங்களில் மது அருந்துவோருக்கு இனி அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும் என கோவா முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறுகையில், பொது இடங்களில் இனி மது அருந்த கூடாது. அவ்வாறு மது அருந்துவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் அவர் தெரிவித்தார்.
மேலும் பிளாஸ்டிக் கவர்கள் உபயேகிப்பேருக்கு அபராதமாக ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது ரூ. 2500ஆக உயர்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைகள், நெடுஞ்சாலைகள் என பொதுஇடங்களில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் வீசப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.