இந்தியாவில் 16 நாளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42 லட்சம் பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் 16 நாளில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 42 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இந்தியாவில் 16 நாளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42 லட்சம் பேருக்கு தடுப்பூசி
Published on

புதுடெல்லி,

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்து, உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி 16-ந் தேதி அமலுக்கு வந்தது.

இந்த திட்டத்தின் கீழ், நேற்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை நாட்டில் 18 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 579 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

* சுகாதார பணியாளர்களில் 96 லட்சத்து 27 ஆயிரத்து 650 பேர் முதல் டோசும், 66 லட்சத்து 22 ஆயிரத்து 40 பேர் இரண்டாவது டோசும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

* 1 கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 871 முன்கள பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 81 லட்சத்து 49 ஆயிரத்து 613 முன்கள பணியாளர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.

* 60 வயது கடந்த 5 கோடியே 43 லட்சத்து 17 ஆயிரத்து 646 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 1 கோடியே 75 லட்சத்து 53 ஆயிரத்து 918 பேர் இரண்டாவது டோசும் செலுத்திக்கொண்டு விட்டனர்.

* 45 வயது கடந்தவர்களில் 5 கோடியே 68 லட்சத்து 5 ஆயிரத்து 772 பேர் முதல் டோஸ், 87 லட்சத்து 56 ஆயிரத்து 313 பேர் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர்.

18-45 வயது பிரிவினர்

* 18-45 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவது கடந்த 1-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த 16 நாட்களில் 18-45 வயது பிரிவினரில் 42 லட்சத்து 58 ஆயிரத்து 756 பேர் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com