

சித்ரதுர்கா
சித்ரதுகா மாவட்டம் இரியூர் தாலுகா மாகொண்டனஹள்ளி கிராமத்தில் பருத்தி ஆலை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் காட்டனஹள்ளி கிராமத்தில் இருந்து பெண்கள் 11 பேர் சரக்கு ஆட்டோவில் பருத்தி ஆலைக்கு வேலைக்கு சென்றனர்.
அப்போது சரக்கு ஆட்டோ மாகொண்டனஹள்ளி கிராமம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு இரியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த இரியூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோவை போலீசார் அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து இரியூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.