கர்நாடகத்தில் 29 மாவட்டங்களில் கொரோனா பலி இல்லை

கர்நாடகத்தில் 29 மாவட்டங்களில் கொரோனா பலி இல்லை
கர்நாடகத்தில் 29 மாவட்டங்களில் கொரோனா பலி இல்லை
Published on

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 23 ஆயிரத்து 709 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெங்களூரு நகரில் 299 பேர், மைசூருவில் 46 பேர், குடகில் 37 பேர், சிவமொக்காவில் 22 பேர் உள்பட புதிதாக 589 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. பல்லாரியில் மட்டும் வைரஸ் தொற்றுக்கு ஒருவர் இறந்தார். மற்ற 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 லட்சத்து 58 ஆயிரத்து 178 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 216 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நேற்று 478 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 40 லட்சத்து 13 ஆயிரத்து 541 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 4 ஆயிரத்து 379 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com