காஷ்மீரில் 2 போலீசார், பா.ஜனதா தொண்டர் சுட்டுக் கொலை

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட அவ்காம் பகுதியை சேர்ந்தவர் பயாஸ் அகமது ஷா. போலீசாக பணியாற்றி வந்த இவர் தல்வாராவில் நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு பயிற்சிக்கும் சென்று வந்தார்.
காஷ்மீரில் 2 போலீசார், பா.ஜனதா தொண்டர் சுட்டுக் கொலை
Published on

ஸ்ரீநகர்,

பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்திருந்த பயாஸ் அகமது ஷா, நேற்று காலையில் சிறப்பு தொழுகைக்கு சென்றார். பின்னர் தொழுகையை முடித்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தனது வீட்டுக்கு அருகே வந்த போது திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், பயாஸ் அகமதுவை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

புல்வாமா மாவட்டத்தில் முகமது யாகூப் ஷா என்ற சிறப்பு போலீஸ் அதிகாரியையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

குப்வாரா மாவட்டத்தில், பா.ஜனதாவைச் சேர்ந்த ஷபிர் அகமது பட் என்பவரின் உடல், குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. அவர், பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிகிறது. அதற்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com