கொள்ளேகாலில் 50 வயதில் கன்னட மொழியில் எம்.ஏ. பட்டம் பெற்ற பெண்

கொள்ளேகாலில் 50 வயதில் கன்னட மொழியில் எம்.ஏ. பட்டம் பெண் பட்டம் பெற்றார்.
கொள்ளேகாலில் 50 வயதில் கன்னட மொழியில் எம்.ஏ. பட்டம் பெற்ற பெண்
Published on

கொள்ளேகால்-

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுன் பசவேஸ்வரா நகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி(வயது 50). இவர் தனது 20-வது வயதில் பட்டப்படிப்பு படித்தார். அதன்பிறகு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார். அதையடுத்து அவர் கொள்ளேகாலில் உள்ள பெண்கள் இலக்கிய மன்றத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

கவிதை, கதை, கட்டுரை எழுதுவதில் திறமை கொண்ட விஜயலட்சுமி கன்னட மொழியில் எம்.ஏ. பட்டம் பெற எண்ணினார். இதற்காக அவர் கர்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தார். பின்னர் பட்டமேற்படிப்பில் சேர்ந்து படித்த அவர் தற்போது 71 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றிபெற்று இருக்கிறார். 50 வயதில் கன்னட மொழியில் பட்டமேற்படிப்பு படித்து முடித்துள்ள விஜயலட்சுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com