மராட்டியத்தில் அடுத்த மாதத்திலும் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்

மராட்டியத்தில் அடுத்த மாதத்திலும் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அம்மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மராட்டியத்தில் அடுத்த மாதத்திலும் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்
Published on

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பெருந்தொற்று கொர தாண்டவமாடி வருகிறது. மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்த தொற்றால் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

மராட்டியத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தொற்று பரவல் பெரியளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுகாதார நெருக்கடி இன்னும் முடிவடையவில்லை. இந்த மாத இறுதியிலும், அடுத்த மாதத்திலும் (ஜூன்) நோய் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.

நோய் பரவலை கட்டுப்படுத்த நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை.

இந்த நேரத்தில் மக்களை கவனித்து கொள்வதற்கான எனது கடமையை நிறைவேற்றுவது தான் மிகவும் முக்கியமானது என நான் கருதுகிறேன்.

எனவே இப்போது எந்த விமர்சனங்களுக்கும் நான் பதில் அளிக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com