மங்களூருவில் கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்

மங்களூருவில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூருவில் கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்
Published on

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பழைய துறைமுகம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அவர்கள் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் 2 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கசப்பாபைங்கரே பகுதியை சேர்ந்த ரகிம் (வயது43), முகமது அஷ்ரப் (47) ஆகிய 2 பேர் என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதுகுறித்து மங்களூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com