மும்பையில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து வசூலான அபராத தொகை ரூ.32.41 கோடி

மும்பையில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.32.41 கோடி அபராத தொகையாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
மும்பையில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து வசூலான அபராத தொகை ரூ.32.41 கோடி
Published on

மும்பை,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களின் வரிசையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. அதிலும், மும்பை உள்ளிட்ட நகரங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசங்களை அணிதல் உள்ளிட்டவைகளை கடைப்பிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது.

எனினும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காமல் நடந்து கொள்வதும் காணப்படுகிறது. இதனால், முக கவசங்களை அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

ஆனால், அதனையும் மீறி பொதுமக்கள் அலட்சியமுடன் இருந்து வருகின்றனர். இதனால், முக கவசங்களை அணியாதவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதன்படி, கடந்த 21ந்தேதியில் 14,100 பேர் முக கவசங்களை அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.28.20 லட்சம் வசூலானது.

கடந்த 21ந்தேதி வரை மொத்தம் 16 லட்சத்து 2 ஆயிரத்து 536 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.32 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 800 அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com