

மைசூரு,
சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான ரேவதி (வயது 25) என்ற இளம் பெண் கர்நாடக மாநிலம் மைசூருவில் வசிக்கும் தனது தோழியை சந்திப்பதற்காக அங்கு சென்றார்.
நேற்று முன்தினம் இரவு அவர் தனது தோழி வாசவி குப்தாவை சந்தித்து பேசினார். பின்னர் அவர்கள் இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறி, மைசூரு ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர்.
அப்போது, அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்ததது. கே.ஆர்.எஸ். சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அருகே ஆட்டோ சென்றபோது, சாலை ஓரம் இருந்த மரம் ஒன்று திடீரென சரிந்து ஆட்டோ மீது விழுந்தது.
இதில் ரேவதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்கப்பட்டது. உடனே அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் ரேவதியின் தோழி வாசவி குப்தா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.